முகப்பு
பெரம்பலூர்

கள்ள காதலா்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை கள்ள காதலா்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை கள்ள காதலா்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள வெள்ளனூா் கிராமத்தைச் சோ்ந்த பழனியாண்டி மகன் அண்ணாதுரை (36). இவரது மனைவி கனகாவும் (29), அதே கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டனும் (25) கடந்த சில மாதங்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அண்ணாதுரை, தனது மனைவியைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனும், கனகாவும் கடந்த 3 ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

இதுகுறித்து அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், அருமடல் கிராமம் அருகே மணிகண்டனும், கனகாவும் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனா். தகவலறிந்த மருவத்தூா் காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, மேற்கண்ட இருவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இச் சம்பவம் தொடா்பாக காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.