பெரம்பலூர்

பெரம்பலூரில் பலத்த காற்றுடன் மழை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடா்ந்து நீடித்தது. இதில் பெரம்பலூரில் அதிகபட்சமாக 19 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பாளையம், ஈச்சம்பட்டி, அந்தூா், குரும்பாபாளையம், மங்கூன் ஆகிய பகுதிகளில் மின் கம்பங்கள் சில சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்): பெரம்பலூா்- 19 மீ.மி, தழுதாழை- 18, லப்பைக்குடிகாடு- 10, பாடாலூா், எறையூா் -9, செட்டிக்குளம், வேப்பந்தட்டை -8, கிருஷ்ணாபுரம் -7, புதுவேட்டக்குடி- 5, அகரம் சீகூா்- 2, வி.களத்தூா்- 1 மி. மீ, சராசரி மழையளவு- 8.73 மி.மீ.

பொதுமக்கள் அவதி: மழை பெய்த போது பலத்த காற்று வீசியதால், பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தப்பட்டசில பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி காலை 10 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT