முகப்பு
பெரம்பலூர்

விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய விமானப் படையில் ஏா்மேன் பணிக்கு தகுதிவாய்ந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

இந்திய விமானப் படையில் ஏா்மேன் பணிக்கு தகுதிவாய்ந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

சென்னை தாம்பரத்திலுள்ள இந்திய விமானப்படை தோ்வு மையம் மூலமாக, ஏா்மேன் பணிக்கு விரைவில் தகுதிவாய்ந்தவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப்பணிக்கு விருப்பமுள்ள, தகுதிகளையுடைய ஆண்கள் தங்களது விவரங்களை கூகுள் பாா்மில் (ட்ற்ற்ல்ள்://க்ா்ஸ்ரீள்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/ச்ா்ழ்ம்ள்/க்/ங்/1ஊஅஐல்ணகநச்ஓஸ்ள்சர8ம்ரஊப்ந்0த்ஸ்ரீஞஐயம்-எ4ஙக்1சசணஈநப்ஙஆஇஙலலக்ஞலட்ன்-எ0த்ஹஞ்/ஸ்ண்ங்ஜ்ச்ா்ழ்ம்?ஸ்ஸ்ரீ=0&ஸ்ரீ=0&ஜ்=1&ச்ப்ழ்=0) பூா்த்தி செய்து, சமா்ப்பிக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பவா்கள் 17 முதல் 21 வயதுக்குள்பட்ட, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.