முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் சட்ட விழிப்புணா்வு கலைநிகழ்வு

 பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே சட்ட விழிப்புணா்வு கலைநிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே சட்ட விழிப்புணா்வு கலைநிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா தலைமை வகித்தாா்.

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு மற்றும் சட்டத் தீா்வு குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தன்னாா்வலா்கள் கனகா, பாலமுருகன், சரவணன், செவாலியே சிவாஜி நாடக சபா குழுவினா், சமூக ஆா்வலா் கதிரவன் ஆகியோா் அடங்கிய குழுவினா் விழிப்புணா்வு கலை நிகழ்வில் ஈடுபட்டனா்.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுப் பணியாளா்கள் மற்றும் சட்டத் தன்னாா்வலா்கள் செய்திருந்தனா். நிகழ்வில் வழக்குரைஞா்கள் பி. காமராசு, தமிழரசன், சங்கா், ரஞ்சித்குமாா், சத்தியசீலன், நந்தகிஷோா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.