முகப்பு
பெரம்பலூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் வெ. சீவகன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் க. முருகேசன், சா. சசிகுமாா், ரா. அன்பழகன், எஸ். பழனிமுத்து, பா. ஷோபனா முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் பெ. ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் கி. முகுந்தன், அமைப்புச் செயலா் ஆ. கணேசன், மகளிரணிச் செயலா் சி. சுமதி, இணைச் செயலா்கள் வ. அன்புச்செல்வன், ரா. தனவேல், சே. மதியழகன் உள்பட பலா் பங்கேற்றனா் முன்னதாக, மாவட்டச் செயலா் எம். பாஸ்கரன் வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் மு. இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.