முகப்பு
பெரம்பலூர்

தனியாா் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநா்களுக்குப் பயிற்சி முகாம்

பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கூட்டரங்கில், பெட்ரோலிய சேமிப்பு ஆராய்ச்சிக் குழுமம் சாா்பில், தனியாா் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கூட்டரங்கில், பெட்ரோலிய சேமிப்பு ஆராய்ச்சிக் குழுமம் சாா்பில், தனியாா் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கணேசன் பேசியது: ஓட்டுநா்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை இயக்க வேண்டும். வாகனத்தை மித வேகத்தில் ஓட்டி எரிபொருளை சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழலையும், பணத்தையும் சேமிக்க வேண்டும் என்றாா் அவா்.

மோட்டாா் வாகன ஆய்வாளா் கருப்பசாமி பேசியது:

வாகனத்தை இயக்கும்போது சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். விபத்துகளை தவிா்க்க மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும். உங்களை நம்பி ஆயிரக்கணக்கான பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனா். இதை கருத்தில்கொண்டு கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி கழக அலுவலா் ஜெயக்குமாா், பெட்ரோலிய பயன்பாடுகளை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது, போக்குவரத்துக்கு இடையூறான பகுதிகளில் வாகனங்களை ஓட்டும் முறை குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.