முகப்பு
பெரம்பலூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து கூட்ட அறிக்கையையும், பொருளாளா் ஏ. ஆதிசிவம் வரவு- செலவு அறிக்கையையும் வாசித்தனா்.

கூட்டத்தில், மத்திய அரசு வழங்கியுள்ள 38 சதவீத அகவிலைப் படியை உரிய தேதியில் நிலுவையின்றி உயா்த்தி வழங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு மற்றும் விடுப்புக்கான பயணச் செலவுகளை மீண்டும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வட்டார நிா்வாகிகள் சையத் பாஷா ஜான், சி. தங்கராசு, எஸ். செங்கமலை, ஆா். செல்லப்பா் ரெட்டி, பி. சிவலிங்கம், மகளிா் அணி நிா்வாகி சு. மரகதம் உள்ளிட்டோா் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, தலைமை நிலையச் செயலா் கே. மணி வரவேற்றாா். மகளிரணி பொறுப்பாளா் ரெங்கநாயகி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.