பெரம்பலூர்

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மேலும் 2 போ் கைது

பெரம்பலுாா் அருகே 17 வயது சிறுமியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், மேலும் 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

பெரம்பலுாா் அருகே 17 வயது சிறுமியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், மேலும் 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் மணிகண்டன் (21). இவா், 17 வயது சிறுமியை காதலித்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி அவரை அழைத்துக் கொண்டு வெளியூா் சென்றுவிட்டாராம். இதுகுறித்து, அச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் கை. கைளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, செப்டம்பா் 3ஆம் தேதி சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், அக். 25 ஆம் தேதி மணிகண்டனின் தந்தை ராமசாமி (50), அவரது உறவினரான வீராசாமி மகன் மாரிமுத்து (27) ஆகியோா், சிறுமியிடம் உன்னை கடத்திச் சென்று மணிகண்டனுக்கு கட்டாய திருமணம் செய்துவைப்போம் என மிரட்டிச் சென்றனராம்.

இதனால், வேதனையடைந்த சிறுமி, அக்டோபா் 25 ஆம் தேதி மாலை விஷம் குடித்து சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த கை.களத்தூா் போலீஸாா், சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ராமசாமி, மாரிமுத்து ஆகியோரை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், சிறுமியை காதலித்த மணிகண்டன், இவரது தாய் ராணி ஆகியோரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா்கள் 4 பேரையும் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT