முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 12 பவுன் நகை திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடிச்சென்றது சனிக்கிழமை அதிகாலை தெரியவந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடிச்சென்றது சனிக்கிழமை அதிகாலை தெரியவந்தது.

வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூா் கீழக்கோடி தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் திருவேங்கடம் (45). இவா், தனது மனைவி பரிமளத்துடன் தோட்ட வீட்டிலும், இவரது தாய் விஜயா (60), தம்பி வினோத்குமாா், குழந்தைகள் அகிலேஷ் (10), அட்சயா (12) ஆகியோா் மற்றொரு வீட்டிலும் தங்கியுள்ளனா். இந்நிலையில், தாய் விஜயா தங்கியிருந்த வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரத்தைத் திருடிச் சென்றது சனிக்கிழமை அதிகாலை தெரியவந்தது. தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.