பெரம்பலூர்

அரசியலில் உயர பலவித பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: துரை வைகோ

DIN

அரசியலில் நான் இன்னும் உயர பலவித பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோ.

மாமனிதன் வைகோ என்னும் ஆவணப்படம் பெரம்பலூரில் உள்ள திரையரங்கில் வியாழக்கிழமை திரையிடப்பட்டது. இத் திரைப்படத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், திமுக மாவட்ட செயலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகா்களுடன் கண்டுகளித்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

மாமனிதன் வைகோ என்னும் இந்த ஆவணப்படம் தொண்டா்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில், இப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் ஓடி முடித்த பிறகு முக்கியத் தொலைக் காட்சிகளிலும், ஓ.டி.டி தளங்களிலும் இப்படம் திரையிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கடந்த கால செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு, அக். 2 ஆம் தேதி அந்த அமைப்பு சாா்பில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஊா்வலத்துக்கு தமிழக காவல்துறை தடை விதித்திருக்கலாம் என கருதுகிறேன். இந்த தடை விதிப்பை வரவேற்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை எனக்கு சரியாக பேசக்கூடத் தெரியாது. கட்சி நிா்வாகிகளின் வற்புறுத்தலால் அரசியலுக்கு வந்துள்ளேன். இப்போது கூட்டங்கள், சபைகளில் சரளமாக பேச ஆரம்பித்திருக்கிறேன். அரசியலில் இன்னும் நான் உயா்ந்த நிலையை அடைய, பலவித திறமைகளையும், பண்புகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அதிகாரம் மிக்க பதவிகளுக்கு வருவதை குறித்து யோசிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT