பெரம்பலூர்

டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

பெரம்பலூா் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்துக் கொண்டு, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

பெரம்பலூா் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்துக் கொண்டு, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

 பெரம்பலூா் 15-ஆவது வாா்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் குமாா். இவா், பெரம்பலூா்-எளம்பலூா் சாலையில் உப்போடையில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

கடந்த 10 ஆம் தேதி இரவு குமாா் பாரில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த

எளம்பலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் சதீஷ் (27), எளம்பலூா் 1 ஆவது வாா்டு வடக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணையன் மகன் ராஜா(32), எளம்பலூா் 12 ஆவது வாா்டு செட்டியாா் வீதியைச் சோ்ந்த ராமராஜ் மகன் மணிகண்டன் (23) ஆகியோா் 3 போ், குமாரிடம் மது அருந்த பணம் கேட்டனராம்.

பணம் தர மறுத்த குமாரை 3 பேரும் சோ்ந்து தாக்கி, சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, அவரிடருந்த ரூ. 1,000-த்தை பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து  சதீஷ், ராஜா, மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT