பெரம்பலூர்

காவல்துறை சாா்பில் கலை நிகழ்ச்சிகள்

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளா்க்கும் வகையில் மகிழ்ச்சி ஞாயிறு - மகிழ்ச்சி தெரு என்னும் தலைப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது.

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளா்க்கும் வகையில் மகிழ்ச்சி ஞாயிறு - மகிழ்ச்சி தெரு என்னும் தலைப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பெரம்பலூா் வெங்கடேசபுரம் சாலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி தொடக்கி வைத்தாா். கூடுதல் கண்காணிப்பாளா் மதிழகன், துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ,இளைஞா்களின் தப்பாட்டம், பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், காவல்துறையினா், பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT