பெரம்பலூர்

பாரம்பரிய காய்கனி சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு விருது

பெரம்பலூா் மாவட்டத்தில் பாரம்பரிய காய்கனிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பாரம்பரிய காய்கனிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பாரம்பரிய காய்கனி ரகங்களை மீட்டெடுத்து, இதர விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கனி விதைகளைக் கொண்டுசோ்த்தல், முறையான மண் வள மேம்பாடு அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், மாவட்ட அளவிலான நிபுணா் குழு மூலம் சிறந்த விவசாயிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கனிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பங்கேற்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதில் தோ்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், 2 ஆம் பரிசாக ரூ. 10 ஆயிரமும் வரைவோலையாக வழங்கப்படும். மேலும், தகவலுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT