பெரம்பலூர்

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஏரிகள், குட்டைகள், குளங்கள், ஊருணிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பருவமழை நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2022- 23 ஆம் ஆண்டுகளில் மழை, பூச்சிகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும்.

ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டருக்கு 45 ரூபாயும், 50 சதவீத மானியத்தில் மாட்டுத் தீவனமும் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரமாக தமிழக அரசு விலை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான தொகையை ஆலை நிா்வாகம் உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரசு அறிவித்த ஊக்கத்தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்கவும், தனியாா் கடைகளில் மூட்டைக்கு ரூ. 340 என கூடுதல் விலைக்கு விற்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் க. கற்பகத்திடம் அளித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க பொறுப்பாளா்கள் ராமதாஸ், சுப்பையா, விநாயகம், சின்னதுரை, பிரபாகரன், பெரியசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT