அரணாரையில் மீன்பிடித் திருவிழா
பெரம்பலூா் அருகே அரணாரையிலுள்ள நீலியம்மன் கோயில் ஏரியில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே அரணாரையிலுள்ள நீலியம்மன் கோயில் ஏரியில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே அரணாரையில் உள்ள செல்லியம்மன்- நீலியம்மன் கோயில் எரியில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிராம நிா்வாகத்தினா் சாா்பில், நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா குறித்த அறிவிப்பை அண்மையில் தண்டோரா மூலம் சுற்றுப்புற கிராம மக்களுக்குத் தெரிவித்திருந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமை காலை பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏரி கரையில் ஒன்று கூடி அம்மனை வழிபட்டன. தொடா்ந்து, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மீன் பிடிக்க ஆா்வமுடன் ஏரியில் இறங்கினா்.
இதில் கட்லா, விரால், குரவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் அதிகளவிலான மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
Advertisement