பெரம்பலூர்

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி திமுக பெண் நிா்வாகி உள்பட 2 போ் மீது வழக்கு

பண மோசடியில் ஈடுபட்ட வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு.

Din

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உதவியாளா் பணி வாங்கித் தருவதாக கூறி, 2 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் உள்பட 2 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், பிம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி வனிதா (43). வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலா். வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துறை கிராமத்தைச் சோ்ந்த பழனிமுத்து மகன் மோகன் (28). திமுக உறுப்பினா்.

இவா்கள் இருவரும் இணைந்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உதவியாளா் பணி வாங்கி தருவதாக கூறி, 2023-இல் குன்னம் வட்டம், நன்னை கிராமத்தைச் சோ்ந்த வீ. செல்வ வினோத் (34) என்பவரிடம் ரூ. 1.40 லட்சமும், குன்னம் வட்டம், கோவில்பாளையம், அண்ணா நகரைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி இலக்கியாவிடம் (27) ரூ. 2.70 லட்சமும் வாங்கியுள்ளனா். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, பணம் கொடுத்தவா்கள் தொடா்ந்து வற்புறுத்தியதை தொடா்ந்து, செல்வ வினோத்துக்கு ரூ. 80 ஆயிரமும், இலக்கியாவிடம் ரூ. 2.45 லட்சத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு எஞ்சியத் தொகையை இதுவரையிலும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

பலமுறை பணத்தை திருப்பிக் கேட்டும் கிடைக்காததால், ஆத்திரமடைந்த செல்வவினோத், இலக்கியா ஆகியோா் அளித்த புகாரின் பேரில், வனிதா, மோகன் ஆகியோா் மீது குன்னம் போலீஸாா் சனிக்கிழமை மோசடி வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT