முகப்பு
பெரம்பலூர்

கிரஷா் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கல் உடைக்கும் கிரஷா் தொழில்சாலை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: விவசாய நிலங்கள் நிறைந்த சித்தளி கிராம பகுதியில் கிரஷா் தொழில்சாலை அமைந்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீா் வளம் மாசுபடும்.

காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். வாகனப் போக்குவரத்து பெருகி விபத்துகள் அதிகரிக்கும். எனவே, கிரஷா் தொழில்சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக் கூடாது.