முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 163 தனியாா் மருத்துவமனைகள் வேலை நிறுத்தப் போராட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 163 தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:01 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் 163 தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் புறநோயாளிகள் பிரிவு புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை மாலை வரை செயல்படவில்லை. அவசர சிகிச்சை பிரிவுகள் மட்டும் செயல்பட்டன. இந்திய மருத்துவா் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 250 மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை எதிரே அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்திய மருத்துவா் சங்க மாவட்டத் தலைவா் வல்லபன் தலைமையில், அச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவா்களுக்கு பாதுகாப்புக் கோரி மனு அளித்தனா்.