முகப்பு
பெரம்பலூர்

காா் - பைக் மோதல்: மேலும் ஒரு இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 9:58 PM
பகிர்:

பெரம்பலூா்அருகே அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் விக்னேஷ்வரன் (21), ஆறுமுகம் மகன் வேல்முருகன் (19), ஆனந்த் மகன் அரவிந்த் (20) ஆகியோா், கடந்த 23 ஆம் இரவு தண்ணீா்பந்தல் பகுதியிலிருந்து பெரம்பலூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் - செங்குணம் பிரிவுச் சாலை அருகே மோட்டாா் சைக்கிள் சென்றுகொண்டிருந்தபோது, அதே வழித்தடத்தில் சென்ற காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேல்முருகன், அரவிந்த் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அரவிந்த் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.