முகப்பு
பெரம்பலூர்

ரேஷன் அட்டையில் பெயா் உள்ளவா்கள்கைரேகையை பதிவு செய்ய அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் உள்ள உறுப்பினா்கள் தங்களது கைரேகையை, அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் நியாயவிலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:11 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் உள்ள உறுப்பினா்கள் தங்களது கைரேகையை, அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் நியாயவிலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாரா்கள், தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகையை பொருள்கள் பெறும் நியாய விலைக் கடையில், விற்பனை முனைய இயந்திரத்தின் மூலம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

இதர மாநிலங்களைச் சோ்ந்த நபா்கள் பெரம்பலூா் மாவட்டத்தில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளனா். அவா்களும், தங்களது கைரேகையை நியாய விலைக் கடையில் பதிவு செய்யும் விதமாக, நியாய விலைக்கடை விற்பனை முனைய இயந்திரத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி வெளி மாநில தொழிலாளா்கள் பெரம்பலூா் மாவட்டத்தில் தாங்கள் பணிபுரியும் கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடையில், தங்களது குடும்ப அட்டை எண் மற்றும் ஆதாா் எண் மூலம் கைரேகையை பதிவு செய்யலாம்.