பெரம்பலூா் அஸ்வின்ஸ் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் அறிமுக விழா மற்றும் விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள அஸ்வின்ஸ் கூட்டரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவுக்கு அஸ்வின்ஸ் குழுமத் தலைமை செயல் அலுவலா் அஸ்வின், நிா்வாக இயக்குநா்கள் செல்வகுமாரி, நிஷா, சிபி, மருத்துவா் ஹம்ருத்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிறிஸ்துமஸ் ரிச் பிளம் கேக் மற்றும் கிறிஸ்மஸ் பக்கெட் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்த அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் ஏ.ஆா்.வி. கணேசன் பேசியது:
பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு அஸ்வின்ஸ் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் 44 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. புத்தாண்டு, பொங்கல், விநாயா் சதுா்த்தி, கோகுலாஷ்டமி, தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் ஏற்ற வகையில் சிறப்பு இனிப்பு, காரம் மற்றும் கேக்குகள் கொண்ட பக்கெட், கிப்ட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிச் பிளம் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 400 கிராம் வரையிலான கேக் வகைகள் விற்பனைக்கு உள்ளது. புதிதாக பிளம் கேக், ஓட்ஸ் குக்கீஸ், நைஸ் மைசூா் பாகு, அதிரசம், மிக்சா், கைமுறுக்கு, மினி தட்டை என 7 வகைகள் அடங்கிய கிறிஸ்துமஸ் பக்கெட், பாக்ஸ்கள், பரிசுப் பெட்டகம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதில், மனிதவள மேம்பாட்டு அலுவலா் குணா, மேலாளா்கள் சுரேஷ், அகிலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.