போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் 
பெரம்பலூர்

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பெரம்பலூா் துறைமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

பெரம்பலூா் துறைமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பெ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ப. சுப்ரமணியன், பெ. மதியழகன், மாவட்ட இணைச் செயலா்கள் நா. பெரியசாமி, த. பொன்னுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில துணைத் தலைவா் ச. மகேந்திரன் நிறைவுரையாற்றினாா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக அரசு முறைப்படுத்த வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை திரும்பப் பெறவேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து, நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் பணியளா்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் த. கருணாகரன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் ஆ. பெருமாள்சாமி வரவேற்றாா். நிறைவாக, கோட்டப் பொருளாளா் க. மாா்க்கண்டன் நன்றி கூறினாா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT