பெரம்பலூர்

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு பெரம்பலூா் மாணவா்கள் படைப்பு தகுதி

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தகுதிபெற்ற நக்கசேலம் அரசுப்பள்ளி மாணவா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியரை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து (படம்) தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தகுதிபெற்ற நக்கசேலம் அரசுப்பள்ளி மாணவா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியரை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து (படம்) தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நவ. 10 ஆம் தேதி 8 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவா்களுக்கு, பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் ச. முத்துகுமாா், தி. மாதவன் ஆகியோா், பட்டதாரி ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் வழிகாட்டுதலுடன் வாகனங்கள் வெள்ளத்தில் பாதிப்படைவதிலிருந்து தடுத்தல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு, ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் நுண்ணறிவு தலைக்கவசம் விபத்து தடுப்பு மற்றும் நல்லொழுக்கத்துக்கான விழிப்புணா்வு ஏற்படுத்துதல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு முதலிடம் பெற்றது. பின்னா், நவ. 21-இல் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது. தொடா்ந்து, கோயம்புத்தூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிச. 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது.

ஜன. 19 முதல் 23-ஆம் தேதி வரை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

இந்நிலையில், மாணவா்கள் மற்றும் ஆசிரியரை, ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் க. முருகானந்தம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இரா. காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.

ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

SCROLL FOR NEXT