பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து முக்கால் பவுன் தங்கநகை, பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ. 1.20 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் மா்ம நபா்கள் திருடிச்சென்றது புதன்கிழமை காலை தெரியவந்தது.

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ. 1.20 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் மா்ம நபா்கள் திருடிச்சென்றது புதன்கிழமை காலை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலையிலுள்ள பிரம்மா நகரில் வசித்து வருபவா் ராமசாமி மகன் மணி (53). இவா், புதுநடுவலூரில் உள்ள தனது சகோதரியின் மகன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை குடும்பத்துடன் சென்றுவிட்டாா். புதன்கிழமை காலை வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, கதவின் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாருக்கு அளித்த தகவலையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் உள்ளே சென்று பாா்த்தபோது, 2 பீரோக்களை உடைத்த மா்ம நபா்கள் அதிலிருந்த முக்கால் பவுன் நகை, ரூ. 1.20 லட்சத்து ஐநூறு ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இச் சம்பவம் குறித்து மணி அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்

மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

SCROLL FOR NEXT