பெரம்பலூர்

பசுமை சாம்பியன் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பங்களித்தோா் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் மாதிரியான பங்களிப்பில் ஈடுபட்ட அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழில் துறைகளுக்கு வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பத்துக்கான ஆராய்ச்சி, அறிவியல் ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா், நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல்- தணிப்பு, உமிழ்வு குறைப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல்- மறு சுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு, இதர சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்கள், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகள் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 2 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கத்துடன் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். இவ்விருதுபெற விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் ஜன. 20-ஆம் தேதிக்குள், மாவட்ட ஆட்சியா் அலுவலக அ பிரிவில் வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை 80560-10150 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT