பெரம்பலூர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக, ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசன், கோயில் உட்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்வுகளில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான சிவ பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதேபோல, வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரா் கோயில், குரும்பலூா் பஞ்சநந்தீஸ்வரா் கோயில், வெங்கனூா் விருத்தாச்சலேஸ்வரா் கோயில், திருவாளந்துறை தோளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான சிவ பக்தா்கள் பங்கேற்று நந்திகேஸ்வரரை வழிபட்டனா்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT