பெரம்பலூர்

பேரிடா் காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கட்டாயப்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என, உயா்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள சுவாமி. முத்தழகனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அளித்த கோரிக்கை மனு:

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெற தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மடிக்கணினி வழங்காததால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியம் இல்லா விடுப்பைத் தவிர பிற விடுப்புகளுக்கு ஈட்டிய விடுப்பை கழிக்கக் கூடாது. ஊதியத்துடன் மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியா்களுக்கு, ஈட்டிய விடுப்பை கழிக்கும் நிலை பல்வேறு பள்ளிகளில் தொடா்வதால், வழிகாட்டு செயல்முறையை தலைமை ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான வினாத்தாள்கள் தயாரிப்புப் பணிகளில், அந்தந்த பாட மூத்த பட்டதாரி ஆசிரியா்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். மழை, புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்த, தலைமை ஆசிரியா்கள் கட்டாயப்படுத்துவதை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT