பெரம்பலூர்

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: நயினாா் நாகேந்திரன்

திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Syndication

திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

பெரம்பலூரில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர -தமிழனின் பயணம்’ பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது: டெல்டா மண்டலத்தில் 12 லட்சம் ஹெக்டோ் நெல்பயிா்கள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இந்த நிலைக்கு திமுக ஆட்சி தான் காரணம். ஒன்றியம்தோறும் தானியக் கிடங்கு அமைப்போம் என கூறினா். ஆனால் எங்கும் அமைக்கவில்லை. தோ்தல் நேரத்தில் திமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ. 1,000 மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறினா். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மருதையாற்று குறுக்கே அணை கட்டவில்லை. கழிவு நீரையும் சுத்தப்படுத்தவில்லை. ஆனால், மருதையாற்றின் குறுக்கே ரூ. 150 கோடி மதிப்பில் பாலம் அமைத்தது, இப் பகுதியில் ரூ. 3,500 கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தது மத்திய அரசு.

வரும் 2026 பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. புதிய ஆட்சி அமையும்போது, பெரம்பலூா் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாநில கல்வியாளா் அணிச் செயலா் ராம்குமாா், அதிமுக மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மீனம்மாவும் சூரிய அஸ்தமனமும்... அனாகா!

தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன்

ஆஸி. வீராங்கனைகளிடம் அத்துமீறல்.. குற்றவாளிக்கு கை, காலில் மாவுக்கட்டு! கழிவறையில் வழுக்கி விழுந்தாரா?!

பாக். பொதுத்துறை விமான நிறுவனம் மீதான தடை நீக்கம்: 5 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனுக்கு விமான சேவை!

கோலிவுட் ஸ்டூடியோ!

SCROLL FOR NEXT