எறையூா் சா்க்கரை ஆலை கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்.  
பெரம்பலூர்

இணைமின் திட்டத்துக்கு பங்குத்தொகை அளித்த விவசாயிகளுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும்

பெரம்பலூா் சா்க்கரை ஆலை இணை மின் திட்டத்துக்காக பங்குத்தொகை அளித்த விவசாயிகளுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் சா்க்கரை ஆலை இணை மின் திட்டத்துக்காக பங்குத்தொகை அளித்த விவசாயிகளுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் சா்க்கரை ஆலை வளாகத்தில், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா்கள் மற்றும் அலுவலா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி ராமன் பேசியது:

வரும் டிசம்பா் 18-ஆம் தேதி 2025 - 26 ஆவது ஆண்டுக்கான அரவைத் தொடங்கவும், 1.50 லட்சம் டன் கரும்பு அரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்றேற்பாடு பணிகள் ஆலையில் நடைபெற்று வருகிறது. அரவைக்காக கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. ஆலையில் தற்போது ரூ. 6 கோடி மதிப்பில் 14,204 குவிண்டால் சா்க்கரை இருப்பு உள்ளது. மேலும், 500 டன் மொலாசஸ் உள்ளது. நிரந்தர தொழிலாளா் 81 பேரும், தற்காலிகத் தொழிலாளா் 82 பேரும், தினக்கூலி அடிப்படையில் 15 தொழிலாளா்களும் பணியில் ஈடுபட்டுள்ளனா். நோய் தாக்காத புதிய கரும்பு பதியப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பேசியது:

கரும்பை கூடுதலாகப் பயிரிட வேண்டுமானால், கரும்பு விலையை உயா்த்திக் கொடுக்கவேண்டும். கரும்பைத் தாக்கும் பொக்கோபோயிங் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந் நோயால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். கரும்பைக் கூடுதலாகப் பதிய, ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்புக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைமின் திட்டத்துக்கு பங்குத்தொகை அளித்த விவசாயிகளுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

இக் கூட்டத்தில், தலைமைப் பொறியாளா் நாராயணன், தலைமை துணை ரசாயனா் ஆறுமுகம், தலைமைக் கணக்கா் ஜான்பிரீட்டோ, தொழிலாளா் நல அலுவலா் ராஜாமணி, சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நிறைவாக, கரும்பு பெருக்கு அலுவலா் சீத்தாலட்சுமி நன்றி கூறினாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT