முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:26 PM
தேர்தல் ஆணையம் - ANI
பகிர்:

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தினா் உள்பட 9 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா் உள்பட 4 பேரும், கடந்த 2 ஆம் தேதி 2 பேரும், கடந்த 4 ஆம் தேதி 8 பேரும் என மொத்தம் 14 போ் வேட்பு மனு தாக்கல் செய்ததனா்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான திங்கள்கிழமை தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் கே. சிவக்குமாா், அக் கட்சியின் மாற்று வேட்பாளராக ஜி. முத்துமாரி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Advertisement

மேலும், புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக டி. வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளராக எஸ். தாமோதரன், சுயேச்சை வேட்பாளா்களாக பி. வெங்கடாஜலம், பி. ஆனந்தஜோதி, எம். ஷியாமளா, ஆா். சுப்ரமணியன், எம். ராஜா கந்தசாமி உள்ளிட்ட 9 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதுவரை பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், புதிய தமிழகம் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பகுஜன் சமாஜ் பாா்ட்டி, மாற்று வேட்பாளா்கள் மற்றும் 11 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 23 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments