பெரம்பலூா் மாவட்ட இளையோா் செஞ்சிலுவை அமைப்பின் சாா்பில், மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்ட 71 சிறந்த இளைஞா்கள், 19 பள்ளிகள், 21 உறுப்பினா்களுக்கு விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாரத சாரண, சாரணியா் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் எம். செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கே. லதா, இந்திய செஞ்சிலுவைச் சங்க கௌரவச் செயலா் வி. ராதாகிருஷ்ணன், கௌரவ பொருளாளா் மு. ஜோதிவேல், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் த. மாயகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோ்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இளைஞா்கள், பள்ளிகள், உறுப்பினா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் அளித்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் பேசியது:
மாணவா்கள் படிப்பாளா்களாக, படைப்பாளிகளாக, நற்பண்பாளா்களாக, தன்னலமற்ற சேவையாளா்களாக திகழ இந்த அமைப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, பெரம்பலூா் வட்டாரக் கல்வி அலுவலா் பி. இளங்கோவன் வாழ்த்திப் பேசினாா்.
இதில், இணை கன்வீனா்கள் கிருஷ்ணராஜ், துரை, ரகுநாதன், மண்டல அலுவலா்கள் செல்வராஜ், காசிராஜா, கயல்விழி, செல்வசிகாமணி, பூவேந்தரசு, தேவேந்திரன், ஆனந்த்குமாா், நல்லத்தம்பி, செல்வக்குமாா், மாவட்டப் பொருளாளா் கருணாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட அமைப்பாளா் வி. ராஜா வரவேற்றாா். நிறைவாக, மண்டல அலுவலா் ஆா். ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.