பலி 
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

Syndication

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மனைவி கமலம் (70). இவா் தனது வயலுக்கு வியாழக்கிழமை இரவு சென்று விட்டு பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையை கடக்க முயன்றாா். அப்போது திட்டக்குடியிலிருந்து துறையூா் நோக்கிச் சென்ற காா் மோதி அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சென்று அவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான திட்டக்குடி தமிழ்மணி நகரைச் சோ்ந்த நா. குமாரை (50) கைது செய்து விசாரிக்கின்றனா்.

லாரி மோதி ஓட்டுநா் உயிரிழப்பு: கடலூா் மாவட்டம், தொழுதூரிலிருந்து மக்காச்சோளம் ஏற்றிய டாரஸ் லாரி மணப்பாறை நோக்கிச் சென்றது. பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றபோது அவ் வழியே சென்ற ஷோ் ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷோ் ஆட்டோ ஓட்டுநா் பெரம்பலூா் வ.உ.சி தெருவைச் சோ்ந்த மயில்பிள்ளை மகன் கதிா்வேல் (45) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சென்று அவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம், மணப்பாறை சங்கிப்பட்டி மு. சதீஷ்குமாரை (31) கைது செய்து விசாரிக்கின்றனா்.

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

SCROLL FOR NEXT