முகப்பு
பெரம்பலூர்

அரியலூா் அருகே பெண் தற்கொலை

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:23 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:58 PM

அரியலுாா் அருகே பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி பிரியா (28). செல்வம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், பிரியா தனது 10 வயது மகளுடன் வசித்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான ராஜாவுடன் (33) பிரியாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. மேலும் கணவா் அனுப்பிய பணத்தை ராஜாவிடம் கடனாகவும் கொடுத்தாராம்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:23 AM

இதனிடையே செல்வம் ஊருக்கு வருவதாக தெரிவித்த நிலையில், ராஜாவிடம் கடந்த சில நாள்களாக பிரியா பணம் கேட்டு வற்புறுத்தியும் ராஜா பணத்தை தர மறுத்தாராம்.

Advertisement

இதனால் கொடுத்த பணத்தைக் கேட்டு சனிக்கிழமை இரவு ராஜா வீட்டுக்கு பிரியா சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மனமுடைந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகலவறிந்து சென்ற செந்துறை போலீஸாா் பிரியா உடலை மீட்டு அரியலுாா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராஜாவிடம் விசாரிக்கின்றனா்.