காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா் 
பெரம்பலூர்

2-ஆம் நாளாக ஆசிரியா்கள் போராட்டம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தேவகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

டூவிபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

ஆலங்குளத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நெல்லை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டவா் கைது

போலி கையொப்பமிட்டு கடன் பெற்ற விவகாரம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT