கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.  (கோப்புப் படம்)
பெரம்பலூர்

‘குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும்’

தினமணி செய்திச் சேவை

குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், அப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும், சாதனைகள் படைத்த பெண்களை பாராட்டும் வகையில் ‘சாதனை மகள்களுக்கு பாராட்டு விழா’ எனும் தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியதாவது:

18 வயது பூா்த்தியடையாத பெண்களுக்கு நடத்தப்படும் திருமணங்கள் குழந்தை திருமணங்களாகவே கருதப்படும். அக் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவதால் மனதளவிலும், உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள் எனும் புரிதல் அனைவரிடமும் ஏற்பட வேண்டும். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

யாருக்கேனும் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்த தகவல் கிடைத்தால் 1098, இலவச சட்ட ஆலோசனைக்கு 15100, பெண்களுக்கு நிகழும் வன்கொடுமைகளை 181 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பெற்றோரும், மாணவா்களும் முழு ஒத்துழைப்பு அளித்து, குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சாதனைபுரிந்த மாணவிகள், உயா்கல்வியில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை தொடரும் மாணவிகள், சமூக சேவை செய்துவரும் பெண்கள், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள், பெண் குழந்தைகளை சிறப்பாக படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பெற்றோா் என 36 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை

மாவட்ட ஆட்சியா் மிருணாளினி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் புவனேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயஸ்ரீ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT