முகப்பு
புதுக்கோட்டை

வருவாய் ஆய்வாளர்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வருவாய் ஆய்வாளர் இருவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வருவாய் ஆய்வாளர் இருவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருவாய்த் துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மணமேல்குடி ஒன்றியம், இடையாத்திமங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்வதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தாராம்.
 இதுகுறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, கோட்டைப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் புவிராஜ், மணமேல்குடி வருவாய் ஆய்வாளர் ராஜா ஆகியோர் வெüóளிக்கிழமை இடையாத்திமங்களம் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
 அப்போது அங்கு சென்ற ஊராட்சித் தலைவர் பாண்டியராமன் உள்ளிட்ட சிலர் வரு
 வாய் ஆய்வாளர்களைத் தாக்கினராம்.
 இதை கண்டித்தும், ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் எஸ். ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஜெயபாலன், செயலர் சி. கோவிந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.
 இதேபோல அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டத் தலைமையிடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

முழு கட்டுரையைப் படிக்க →