"அரசுப் பணியாளர்களுக்கும் கலந்தாய்வு தேவை
ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ளதைப் போல அரசுப் பணியாளர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ளதைப் போல அரசுப் பணியாளர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர் சங்க துணைப் பொதுச்செயலர் வி. புகழேந்தி தலைமையில் நடைபெற்ற மாவட்ட சிறப்புப் பேரவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஊதியக் குழு முரண்களைக் களை அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையைப் பெற்று அதன் மீது சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசித் தீர்வு காண வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழு என்ற முறையில் ஊதியக்குழு அமைத்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த ஊதியக்குழு அமைப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து துறைகளிலும் தொகுப்பூதியம், தினக்கூலி,மதிப்பூதியம், வெளி ஆதாரப்பணியாளர் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து அனைவருக்கும் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தோட்டக்கலை, வேளாண் பல்கலைக்கழகப் பண்ணைகளில் பணியாற்றும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் அகில இந்திய மாநில பணியாளர் சம்மேளன அகில இந்திய பொதுச்செயலர் கு. பாலசுப்பிரமணியன், மாநிலத் தலைவர் கு. பால்பாண்டியன் ஆகியோர் பேசினர்.
பல்வேறு சங்க நிர்வாகிகள் அ. தெüலத், வீ. சிங்கமுத்து, கே.ஆர். தர்மராஜன், தி. திருநாவுக்கரசு, எம். கவியரசன், செல்வராஜ், கி. மாரிமுத்து, உ. அரசப்பன் ஆகியோர் வாழ்த்தினர்.
அரசுத் தேர்வுத்துறை பணியாளர் சங்க நிர்வாகி சி.தமிழரசன் வரவேற்றார். அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர் சங்க நிர்வாகி கி. முருகன் நன்றி கூறினார்.