புதுக்கோட்டை

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதுகை மாணவிகள்

DIN

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கத் தேர்வான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை சென்னை புறப்பட்டனர்.
சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.8-ல் இருந்து 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகள் வழிகாட்டி ஆசிரியர் எம். ஸ்டாலின் சரவணன் தலைமையில் வியாழக்கிழமை புறப்பட்டனர். அவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி தலைமையில் ஆசிரியர்கள், கறம்பக்குடி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழியனுப்பினர். மேலும், ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு பயணச் செலவாக ரூ. 5 ஆயிரம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT