முகப்பு
புதுக்கோட்டை

குடிநீர் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டை அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

புதுக்கோட்டை அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கல்லுக்காரன்பட்டி கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 
இந்தப் பகுதியினருக்கு அவர்களுக்கு பல மாதங்களுக்கு முன் குடிநீர் விநியோகம்  தடைபட்டது.  
மேலும், அப்பகுதியில் சாலை வசதிகள் இல்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற புதுக்கோட்டை நகர போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் உடனடி நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியைத் தொடர்ந்து  போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →