கருகும் நெற்பயிரைக் காக்கக் கோரி ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்
கருகும் நெற்பயிர்களைக் காக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இந்திய விவசாயிகள் காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டைகருகும் நெற்பயிரைக் காக்கக் கோரி ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்
கருகும் நெற்பயிர்களைக் காக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இந்திய விவசாயிகள் காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருகும் நெற்பயிர்களைக் காக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இந்திய விவசாயிகள் காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில விவசாயிகள் காங்கிரஸ் செயலர் ஆலடிக்காடு கணேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
முள் மேடு பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆவுடையார்கோவில் பகுதியில் சாலைகளைச் செப்பனிடாத நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தைக் கண்டிப்பது, கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயம் பாதித்த அனைத்துப் பகுதிகளுக்கும் பயிர்க் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநிலத் தலைவர் மாரிமுத்து, நிர்வாகிகள் நீலகிருஷ்ணன், முத்துவீரப்பெருமாள், துரைராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.