புதுக்கோட்டை

சிதம்பரம், அமல அன்னை, அரிமா மெட்ரிக், வார்ப்பட்டு அரசு பள்ளி 100% தேர்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி, அமல அன்னை மெட்ரிக் பள்ளி, அரிமா மெட்ரிக் பள்ளி மற்றும் வார்ப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளியில் தேர்வெழுதிய 55 பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களை பள்ளி முதல்வர் வே. முருகேசன், மேலாளர் நெ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் தேர்வெழுதிய 84 பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களைப் பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் ஆகியோர் பாராட்டினர்.
அரிமா மெட்ரிக் பள்ளியில் தேர்வெழுதிய 72 பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களைப் பள்ளி முதல்வர் சுப்பையா, அரிமா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பாராட்டினர்.
வார்ப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 32 பேரும் தேர்ச்சிப் பெற்றனர். அதுபோல வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கொப்பனாபட்டி அம்பாள் மெட்ரிக் பள்ளி, காரையூர் இதயா மெட்ரிக் பள்ளி, மேலத்தானியம் நேரு மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT