கந்தர்வகோட்டை பகுதிகளில் வறட்சியால் முள்ளங்கி, கீரை வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி வெள்ளை முள்ளங்கி சுவை மிகுந்தது. இதேபோல் மருங்கூரணி, கொல்லம்பட்டி, ராசாப்பாட்டி உள்ளிட்ட கிராமங்களில் விளையும் அரைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கன்னிக்கீரை, பசலைக்கீரைகள் உள்ளிட்ட கீரை வகைகள் காலை,மாலை இரு வேளைகளிலும் கந்தர்வகோட்டை கடைவீதி பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கந்தர்வகோட்டை பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால் கீரை, முள்ளங்கிகள் போதிய அளவு சாகுபடியின்றி வரத்து குறைந்து போயுள்ளதால், தட்டுப்பாடு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.