புதுக்கோட்டை

கல்லாங்குடியில் சேதமடைந்த நீர்தேக்கத் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

DIN

ஆலங்குடி அருகிலுள்ள கல்லாங்குடி  கலிபுல்லாநகர் காலனியில் இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கல்லாங்குடி ஊராட்சியைச் சேர்ந்த கலிபுல்லா நகர் காலனி மக்களின் பயன்பாட்டுக்காக 30,000லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதடையத் தொடங்கியது. இதுகுறித்து திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கலிபுல்லா நகர் காலனி பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வடகிழக்குப் பருவமழைத் தொடங்கியிருக்கும் நிலையில், மழை தொடர்ந்து பெய்தால் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும்நிலை நிலவுகிறது. மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்து, பழுதான நிலையிலுள்ள தொட்டியை அகற்றுவதற்குரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT