ஊராட்சிச் செயலரை இடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் மனு
புதுக்கோட்டை அருகே 21 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் ஊராட்சிச்செயலரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை அருகே 21 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் ஊராட்சிச்செயலரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரகத்தில் அளித்த மனு: கழிவறை கட்டிய பயனாளிகளுக்கு இதுவரை பணம் வழங்காமல் தாமதப்படுத்தி வருவது உள்பட பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஊராட்சி செயலர் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 21 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமன அதில் குறிப்பிட்டுள்ளனர்.