புதுக்கோட்டை

விராலிமலை பெண்கள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

DIN

விராலிமலை அரசு பெண்கள் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு விராலிமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எம். ஜான்விஸ்வநாதன் தலைமை வகித்து,  டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பரவும் முறை அவற்றின் ஆரம்ப நிலை, காய்ச்சல் வராமல் தடுக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனை, அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறை, சுற்றுப்புற தூய்மை உள்ளிட்ட விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்து பேசினார்.
இதில், சித்த மருத்துவர் சித்ரா, இயற்கை நலமருத்துவர் ராஜேஸ்வரி, குழந்தை நலமருத்துவர் ஜனனி, தலைமையாசிரியர் கோ. ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஜெ. ஆர். அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT