முகப்பு
புதுக்கோட்டை

திமுக சார்பில் அக்.21-இல் அண்ணா பிறந்தநாள் விழா போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் அண்ணா  பிறந்த நாள் விழாபோட்டிகள் அக்.21 -இல்  நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் அண்ணா  பிறந்த நாள் விழாபோட்டிகள் அக்.21 -இல்  நடைபெறுகிறது.
இதுகுறித்து வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சண்முகம் வெளியிட்ட தகவல்:  அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் வரும் (அக். 21) சனிக்கிழமை  மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில் திருமயம் எம்எல்ஏ எஸ்.ரகுபதி, கவிச்சுடர் கவிதைப்பித்தன், த.சந்திரசேகரன், அரு.வீரமணி, சுப.சரவணன், கே.கே.செல்லபாண்டியன், மாரியய்யா, ஆ.செந்தில், இராஜேஸ்வரி, மதியழகன்,  கீரை.தமிழ்ராஜா, மாத்தூர் எம்.பாலசந்தர், எட்வர்டு சந்தோஷநாதன், வை.நடராஜன்,ஆர்.ஆர்.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று நடத்துகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசாக, ரூ. 25,000-மும், இரண்டாம் பரிசு ரூ.15,000-மும், மூன்றாம் பரிசாக ரூ.10,000-மும், ஆறுதல் பரிசுகளாக 10 பேருக்கு ரூ.5,000 வீதமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →