முகப்பு
புதுக்கோட்டை

மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை தீபாவளிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை

மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை தீபாவளிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை தீபாவளிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
    ரோட்டரி சங்கம் சார்பில் புதுக்கோட்டை மச்சுவாடி அருகே உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் புதன்கிழமை  தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் ஆர்.  காசிராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  துணை ஆளுநர் கனகராஜன்,  செயலர் கவிஞர் இளங்கோ, முன்னாள் தலைவர்கள்  கான் அப்துல் கபார் கான், சார்லஸ் ராஜா, அபிபுல்லா, தலைவர்(தேர்வு) திருப்பதி, கல்வியாளர் பி. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்று இல்லவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.
ஆலயங்களில் சிறப்பு வழிபாடு...
தீபாவளி நாளில் பொதுமக்கள் அருகாமையில் உள்ள கோயில்களுக்கு புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சென்று வழிபட்டனர்.   புதுகை நகரில் சாந்தநாதசுவாமி ஆலயம், திருவப்பூர் மாரியம்மன், குமரமலை, திருவேங்கைவாசல், பெரம்பூர் வீர மாகாளியம்மன், தெற்கு நான்காம் வீதி தண்டாயுதபாணி,  கீழ 7 ஆம் வீதி புவனேஸ்வரி, ஆஞ்சநேயர் கோயில், வெங்கலப்பிடாரி கோயில், தேக்காட்டூர் தர்மசர்வர்த்தினி, கடையக்குடி பெருமாள்கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற வழிபாடுகளில் திரளானோர் பங்கேற்றனர்.
ஆலவயலில் கபடிப் போட்டி:
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில்  தீபாவளி பண்டிகையையொட்டி அம்பாள் கபடிக்குழு சார்பில் 27 ஆம் ஆண்டாக கபடி போட்டி நடைபெற்றது. போட்டிக்கு ஊர் மிராஸ் பெரி.அழகப்பன் தலைமை வகித்தார். கபடிக்குழு தலைவர் மலைக்காளை, துணைத் தலைவர் ராமு, கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ப.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில், 53 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை  சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி அணி, 2 ஆவது பரிசை ஏனாதி அணி, 3 ஆவது பரிசை ஆலவயல் அணி மற்றும்  4 ஆவது பரிசை பெருமாநாடு அணியினரும் பெற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →