கொன்னையூர் கோயில் காணிக்கை ரூ. 17 லட்சம்
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 16.75 லட்சம் இருந்தது.
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 16.75 லட்சம் இருந்தது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா அண்மையில் நிறைவுற்றதையடுத்து, கோயிலின் உண்டியல் எண்ணும் பணி உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் அழ.வைரவன் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் உண்டியல்களில் பக்தர்களின் காணிக்கையாக ரூ. 16. 75 லட்சத்து 475, தங்கம் 50 கிராம், வெள்ளி 551 கிராம் இருந்தது.