செவிலியர்களுக்கு கூடுதல் பணி வழங்கக் கூடாது
செலிலியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பணிகளால் பணிச்சுமை அதிகரிப்பதால், கூடுதல் பணிகள் வழங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செலிலியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பணிகளால் பணிச்சுமை அதிகரிப்பதால், கூடுதல் பணிகள் வழங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்டப் பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கீதா தலைமை வகித்தார்.
மாவட்ட செயலர் இந்திரா, தீர்மானங்களை வளியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில, பிரதமரின் திட்டங்களின் மூலம் கிராம சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்படுவதால் பணிச்சுமை அதிகரிக்கிறது.
எனவே கிராம சுகாதார செவிலியர்களின் மன நிலைமையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு கிராம சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணிகள் வழங்குவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். அதிகாரத்தை பயன்படுத்தி கிராம சுகாதார செவிலியர்களை மேல் அதிகாரிகள் சர்வே எடுக்கும் பணி செய்யக் கட்டாயப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.