புதுக்கோட்டை

திருக்களம்பூரில் குடிநீர் கோரி மறியல்

DIN


பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த பல மாதங்களாக ஊராட்சிக்குள்பட்ட பல வீடுகளில் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்படுவதால் குடிநீர் விநியோகம் முழுமையாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை காலை காலிக்குடங்களுடன் பொன்னமராவதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்து முழக்கமிட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT